தரவிரக்கம்
வாய்ப்புகளோ ஏராளம்! ஏராளம்!
இலட்சக்கணக்கான இளைஞர்களும், யுவதிகளும் தங்கள்படிப்பை முடித்து வெளிவருகிறார்கள். ஆனால் படித்து வெளிவரும் இவ்வளவு பேருக்கும் வேலை உண்டா ? உண்மையிலேயே வாய்ப்புகள் இல்லையா... என்றால், வாய்ப்புகளோ ஏராளம்! ஏராளம்! இயற்கை அன்னை தன்னுள்ளே வளங்களை ஒளித்து வைத்திருக்கிறாள்! இரத்தத்தை வியர்வையாக்கி உழைப்போருக்குத் தனதுத செல்வத்தை அள்ளிக் கொடுக்கத் தயாராக இருக்கிறாள். ஆனால் அவ்வானு உழைப்பதற்குத்தான் நமது இளைய சமுதாயம் தயாராக இல்லை. வாழ்வின் அனைத்து வசதிகளையும் உழைக்காமல் அடைய வேண்டுமென்ற கூட்டம் தான் அதிகமாக இருக்கிறது
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கிலை ஒப்புக்கொள்
எத்தொழில் எதுவும் தெரியாமல் இருப்பது உனக்கே சரியாமோ?
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கிலை ஒப்புக்கொள்
எத்தொழில் எதுவும் தெரியாமல் இருப்பது உனக்கே சரியாமோ?
உழவும் தொழிலும் இல்லாமல் உலகில் ஒன்றும் செல்லாது
விழவும் கலையும் விருன்துகளும் வேறுள இன்பமும் இருந்திடுமோ?
வேறுள இன்பமும் இருந்திடுமோ? ஆஹஹஹா ஓஹோஹோ
ஆஹாஹாஹாஹா ஹஹாஹா ம்ம்ம்ம்ம்ம்
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கிலை ஒப்புக்கொள்
கொல்லரும் தச்சரும் கூடாமல் கூடமும் மாடமும் வீடாமோ?
கல்லடி சிற்பியும் தச்சருமே காரியம் பலவினுக் கசசாணி
ஆஹஹஹா ஆஹஹஹா ஆஹாஹாஹாஹா ஹஹாஹா
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கிலை ஒப்புக்கொள்
நெசவுக் காரர்கள் நெய்யாமல் நிலத்தவர் உடைக்கென் செய்வார்கள்
குயவன் செய்திடும் பாண்டமன்றோ குடித்தனம் நடத்திட வேண்டுமென்றும்
குயவன் செய்திடும் பாண்டமன்றோ குடித்தனம் நடத்திட வேண்டுமென்றும்
ஆஹஹஹா ஓஹோஹோ ஆஹாஹாஹாஹா ஹஹாஹா ம்ம்ம்ம்ம்ம்
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கிலை ஒப்புக்கொள்
எத்தொழில் எதுவும் தெரியாமல் இருப்பது உனக்கே சரியாமோ?
நம்மை தேடி வந்த தெய்வம் இயேசு!
ஏதாவது வேலை கிடைக்க உதவி செய்யமாட்டார்களா? என்று போகிறோம்.
நல்ல வசதியாக இருக்கிறவர்களை தேடி-
ஏதாவது பண உதவி செய்யமாட்டார்களா? என்று போகிறோம்.
ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறவர்களை தேடி-
இவர்கள் மூலம் ஏதாவது நன்மைகள் கிடைக்காதா? என்று போகிறோம்.
இப்படி- இந்த உலகத்தில் உள்ள ஒரு கூட்ட மக்களை, இன்னொரு கூட்ட மக்கள் தேடி போய் கொண்டு இருக்கும்போது-
இந்த எல்லா மக்களையும் தேடி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் ஒரு மனிதனாக வந்தார்.
ஆம், இயேசு கிறிஸ்து நம்மை தேடி வந்த தெய்வம்.
நம்மை விசாரித்து, நமக்கு உதவி செய்ய வந்த தெய்வம்.
நம் பாவங்களை மன்னித்து, நம்மை எல்லா தீங்குக்கும் விலக்கி காத்து, நம் கண்ணீரை துடைக்க வந்த தெய்வம்.
நம்மை ஆசீர்வதித்து நம்மை வாழ வைக்க வந்த தெய்வம்.
எல்லாவற்றுக்கும் மேலாக, பரலோக வாழ்வில் அவரோடு கூட என்றென்றும் மகிழும் பாக்கியத்தை நமக்கு தர வந்த தெய்வம்.
இந்த அன்பு தெய்வத்துக்கு உங்கள் உள்ளத்தில் இடம் கொடுத்து இருக்கிறீர்களா?
இந்த அன்பு தெய்வத்துக்கு உங்கள் வீட்டில் இடம் கொடுத்து இருக்கிறீர்களா?
அப்படிஎன்றால்-
நீங்கள் இந்த பூமியில் உயிரோடு இருக்கப்போகும் உங்கள் வாழ்நாள் எல்லாம்-
இயேசு கிறிஸ்துவுக்குள் சுகமாக இருப்பீர்கள்.
இயேசு கிறிஸ்துவுக்குள் சமாதானமாக இருப்பீர்கள்.
இயேசு கிறிஸ்துவுக்குள் சந்தோஷமாக இருப்பீர்கள்.
இயேசு கிறிஸ்துவுக்குள் பாதுகாப்பாக இருப்பீர்கள்.
இயேசு கிறிஸ்துவுக்குள் ஆசீர்வாதமாக இருப்பீர்கள்.
அதுமட்டும் அல்ல-
இயேசு கிறிஸ்துவினால் மற்ற மக்களுக்கும் ஆசீர்வாதமாக இருப்பீர்கள்.