நம்மைப்பற்றி
கல்வி அறிவும் திறமைமிக்க பலதமிழ்மக்கள் சுவிஸ் நாட்டிற்க்கு வந்திருந்தகாலம் 1998 ஆண்டு. அக்காலத்தில் அதிநவீன உற்பத்தி உருவாக்கும் தொழில்நுட்பக்கல்வியை Modern Manufacturing Technology பற்றி எடுத்துக் காட்டி இறைவன் அருளால் TAV எனும் நிறுவனத்தை ஆரம்பித்து எமது மக்கள் பலரை மிக பாராட்டும் அளவிற்கு திறமைசாலிகளாக திறன்மிக்க தொழில்நுட்பவியலாளர்களாக இன்று வரை உருவாக்கி படங்களுடன் அவர்கள் வேலைபற்றி வெளியிட்டுள்ளோம் TAV+ARK இணையபக்கம் Website பார்க்கலாம்.
இவ்கல்வியை ஆங்கிலத்தில் Education For Real World Success என்று சொல்வார்கள். எனவே உலகத்தில் மனிதனுடைய கண்டுபிடிப்பில் ஒர் முழுமையான வெற்றியை தந்தகல்வி. இந்த இயந்திரங்களின் செயற்பாட்டை computer இன் Programm மூலம் மிகமிக நுணுக்கமான அளவில் செயற்படவைத்ததால் பல விதமான நுனுக்கமான பொருட்களை ஒரே அளவில் தயாரித்தமை இந்த Manufacturing Technology மனிதனுடைய கண்டுபிடிப்பில் மிகப்பெரிய வெற்றி
நாங்கள் இதை ஊக்கமாக எடுத்துக்காட்டி கற்றுக்கொடுத்தோம் .
நாங்கள் எதிர்பார்த்தற்க்கு மேலாக பலர் ஆர்வமாக கற்றுக்கொண்டு வேலைபெற்றார்கள்.இங்கும் இந்த Education Success தான்.
எனவே எமது நிறுவனத்தின் மிகச்சிறந்த நன்மைகள்
இத்துறைசார்ந்த மிகச்சிறந்த அனுபவமுள்ள ஆசிரியர்கள்,
புதிய இறுதியாக வந்த பல வகை Software மூலம் புதிய பாடத்திட்டங்கள்
சிறந்த தொழிற்கல்வி நிறுவனங்களுடன் இணைந்து தரமான பயிற்சி வழங்கல்
சுவிஸில் நாம் ABBLibs யின் பயிற்சிநிலையத்துடன் இணைந்து பயிற்சி வழங்கினோம்
சுவிஸில் எங்களிடம் கற்றவர்கள் சிறந்த வேலைகளை பெற்றது மாத்திரமல்ல அவர்கள் வேலையிடங்களில் நல்லமதிப்பையும் உயர்வையும் பெற்றார்கள் இதனால் நமது சான்றிதழ்கள் பெறுமதியான புகழ்பெற்ற சான்றிதழ்கள்.
எமது கவனம் படிப்பின் முடிவில் சுயதிறமை பெற்றவர்களாகவும் சுயமாகதொழிற்சாலைகளை ஆரம்பிக்க / நிர்வாகிக்க திறமைபெறுதல் இதை எமது அனுபவதின் மூலம் உருவாக்குகிறோம்
நாங்கள் என்சொல்ல விரும்புகிறோம் கற்று திறமைசாலிகளாகி தொழிற்சாலைகளை ஆரம்பியுங்கள். இவ்வுலக வளர்ச்சியில் மேலும் பல கண்டு பிடிப்புக்களும் தாயரிப்புக்களும் திருத்தி அமைத்தலும் தேவைப்படுகிறது. இதில் பங்கு கொண்டு நீங்களும் நன்மை பெற்று மற்றவர்களுக்கும் வழிகாட்டுங்கள்.
CNC precision engineering CNC துல்லியமான பொறியியல் வேலைகள் மிகமிக நுணுக்கமான அளவுகளில் தயாரித்தல். இங்குCNC இல் ஆண் பெண்கள் இருபாலருக்கும் இலகுவான வேலைகள் உண்டு. படதில் வேலையின் ஒரு பகுதியை பார்க்கலாம்.
CNC Porgramm மூலம் எவ்வகையான வேலைகளை இயந்திரங்களைக்கொண்டு செய்யலாம் என்பவற்றை கிழேயுள்ள படத்தில் பாருங்கள்.
பயனுள்ள தொழிற் கல்வி
எனவே எமது இத்துறை நோக்கிய அனுபவத்தை வழங்கும் இப்பகுதியில் மக்கள் நலன் விரும்பிகள் ஆசிரியர்கள் இவற்றை எடுத்துகாட்டி எமது மக்களை ஊக்கிவிக்கலாம்.முயற்சியுள்ள மனிதனா நீங்கள்?, இங்கு நீங்களும் முன்னேற பெருவாய்ப்புண்டு. நாம் இதை செய்து காட்டியுள்ளோம். திறமையை உங்களில் உருவாக்குவது எமது வழிகாட்டல். CNC Technology.ஆக CNC Programmer ஆக CNC techniker ஆக CNC Operator Machinist or CAD CAM Programmer ஆக இந்த அதிநவீன உற்பத்தியை உருவாக்கும் CNC Machining (Lathe, Milling) இயந்திரங்களை CNC,CAM Programmகள் மூலம் இயங்கவைக்க modern Manufacturing Technology கற்று நல்ல வருமானம் உள்ள திறமைமிக்க தொழில்நுட்பவியலாளர்களாக பொறியியலாளர்களாக உருவாக முயற்சியுள்ளவர்களை வரவேற்கிறோம்.சுவிஸிக்கு வந்த. jaffna university படித்தவர்கள் civil engineering moratuwa இல் படித்தவர்கள் எமது வழிகாட்டலில் CNC techniker ஆக, சுவிஸிநாட்டு தரத்திற்கு உயர்த்தப்பட்டு சிறந்த தொழிற்சாலையில் வேலைபெற்றுள்ளார்கள். பலதரப்பட்டவர்கள் இங்கு இத்தரத்திற்கு உயர்த்தியுள்ளோம் கணிதம் Mathematical skills including trigonometry and geometry திறமையுள்ளவர்கள் Engineering drawings படவரைவில் ஆர்வம் உள்ளவர்களை இந்த தகுதிக்கு விரைவில் உருவாக்கலாம். OL/AL கணிதம் Mathematical படித்தவர்கள் இங்கு university போகவில்லை என்றகவலையை விடுங்கள். இங்கு மிகச்சிறந்த வேலைவாய்ப்புக்களும் மென்மேலும் படித்து முன்னேறவும் பெருவாய்ப்புள்ள துறையும் உள்ளது. 1998 ஆண்டில் திரு செல்வரத்தினம் சிவபரன் அவர்கள் இத்துறையை இங்கு அறிமுகம் செய்து இதற்கு உயிரூட்டினார். modern Manufacturing Technology யில் 1984 ஆண்டிலில் இருந்து நீண்ட அனுபவங்களையும் இத்துறைசார்கல்வியையும் பயிற்சியையும் பெற்றுஇருந்தார்.
எனவே இத்துறையை அறிமுகம் செய்தபின் இன்று வரை நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமானவர்கள் மிக ஆர்வத்துடன் கலந்து கற்று பயிற்சியும் பெற்று இத்துறையில் வேலை பெற்று தம்மை வழிநடத்தியமைக்கு நன்றியுடையவர்களாக உள்ளனர்.
Manufacturing Technology
இந்த வளர்ந்து வரும் துறையை அறிமுகம் செய்து பாடத்திட்டத்தை அமைத்து கற்று கொடுத்தபோது இன்று எம்மிடம் கற்றவர்கள் உயர்வடைந்தமை மாத்திரமல்ல அவர்கள் பிள்ளைகளும் கூட CAD CAM Technology யை கற்று நல்ல வேலைகளை பெற்றுள்ளார்கள். சுவிஸ்நாட்டில் இந்த தொழிற்கல்வியை அறிமுகப்படுத்தி கற்றுக்கொடுத்து பல தமிழ் மக்களின் உயரவுக்கு வழிகாட்டிய திரு சிவபரன் அவர்களைக்கு பாராட்டுவிழா
பாராட்டு விழாபடங்கள்
படம
தொழில்நுட்பக்கல்வியின் சிறப்பம்சமானது ஒரு மனிதன் தன்திறமையை வெளிக்கொண்டு வந்து, சுயதொழிற்சாலைகளை உருவாக்கலாம். தன் சுயகண்டுபிடிப்புக்களை சுயமாக படம் வரைந்து Programm செய்து தயாரிக்கலாம். தொடர்ச்சியாக படித்து பயிற்சி அனுபவமுள்ள பொறியியலார்களாகலாம். திரு செல்வரத்தினம் சிவபரன் அவர்கள் சுவிஸில் Manufacturing Technology யை ஆரப்பித்த போது இறையருளால் பலர் ஒத்துழைப்பை வழங்கினார்கள். அத்துடன் ABB,LfW,Libs,நிறுவனங்கள். எங்களுடன். இணைந்து பயிற்சி வழங்கினார்கள். வேறுபல நிறுவனங்களும் வேலைத்தளங்களும் ஒத்துழைப்புடன் சுவிஸி நாட்டில் இன்று பலர் இத்துறையில் சிறந்து விளங்குகிறார்கள்.
அவர்களுக்கு எமது நன்றி.எம்மிடம் கற்று வேலைபெற்றவர்கள் ஒரு குறுகிய காலத்தில் வேலைஇடங்களில் திறமைசாலிகளாக திகழ்ந்ததைக் கண்ட பலவேலைவழங்குனர் எமது நிறுவனத்தில் படித்த பலரை தமது வேலையிடங்களில் சேர்த்துக் கொண்டார்கள்.எனவே எமது சான்றிதழ் பிரபலியமானதும் பெறுமதிவாய்ந்தனவாகவும் உள்ளன.
திறமைமிக்க தொழில்நுட்பவியலார்களுக்கு சிறந்த வேலைவாய்ப்புகள் உண்டு. எனவே திறமைசாலிகளை உருவாக்குவதே எமது நோக்கம். சுவிஸில் எமது 16 வருட தொழிற்கல்வி வழங்கல் அனுபவ மூலம் இன்றும் எங்கள் வழிகாட்டலினால் முன்பு படிதவர்களும் மேலும் modern Manufacturing Technology பல புதியவளர்ச்சிகளை எம்மூலம் பெற்று உயர்வடைகிறார்கள். மென்மேலும் இணையத்தளத்திலும் CNC Technology பற்றி விபரங்களை ஆராய்ந்து அறியுங்கள்.
TAV SWISS
Diese E-Mail-Adresse ist vor Spambots geschützt! Zur Anzeige muss JavaScript eingeschaltet sein!